×

நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால் வைகை அணையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.130க்கு விற்பனை

 

ஆண்டிபட்டி, மே 6: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. வைகை அணையில் தனியார் நிர்வாகம் மூலம் மீன்பிடி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரையில் 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பு இருந்ததால் மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 56 அடியாக சரிந்து விட்ட நிலையில் மீனவர்கள் வீசும் வலையில் அதிகமான மீன்கள் சிக்குகின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் வாங்கிச் செல்லும் ஜிலேபி ரகம் மீன்கள் அதிகம் பிடிபட்டு வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 700 முதல் 800 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு கிலோ ரூ 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் அதிகமான பொதுமக்கள் வைகை அணைக்கு வந்து ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்கின்றனர். வைகை அணையின் நீர்மட்டம் குறையும் போது தண்ணீர் தேங்கும் பரப்பளவும் சுருங்கி விடுவதால், மீனவர்கள் வலையில் அதிகம் மீன்கள் சிக்குவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால் வைகை அணையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.130க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,Andipatti ,Andipatti, Theni District ,Dinakaran ,
× RELATED இன்று முதல் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு